ஈழம் சினிமா விநியோகக் கட்டமைப்பு:
அதன் தேவையும் அவசியமும்


ஈழத்தில் தமிழ்த் திரைப்பட முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டு எழுபது ஆண்டுகளைக் கடந்து விட்ட போதிலும், இன்றளவிலும் குடிசைத்தொழிலாகவும் அதேநேரம் ஆங்காங்கே மிளிரும் மின்மினிப் பூச்சிகள் போலவும் அவ்வப்போது சில திரை முயற்சிகள் தோன்றி மறைகின்றன.

இந்த நீண்ட நெடிய பயணத்தில் பலர் "நாமும் நமக்கென்றோர் நலியாக் கலையுடையோம்" என்று சுயநலமற்று ஈழத்துத் திரைப்படத்துறையினை வளர்ப்பதில் தமது வாழ்நாளில் பெரும்பகுதியினை செலவிட்டுள்ளனர். இருப்பினும் இன்றுவரை எமக்கான ஓர் தனித்துவமான திரைப்படத்துறையினை அமைக்கும் முயற்சியில் வெல்ல முடியவில்லை என்பதே நிதர்சனம்.

"நாம் வீழ்வதற்கு நாம் மட்டும் காரணமல்ல, நாம் வீழ்ந்து கிடப்பதற்கு நாம் மட்டுமே காரணம்."

இவற்றினை அடிப்படையாகக் கொண்டு, தமிழியம் அறக்கட்டளையானது இதற்கான திட்ட வரைவொன்றை வகுத்து, கடந்த பல ஆண்டுகளாக திரைப்படப் பயிற்சிப்பட்டறைகள், முழுநேர திரைப்படக் கற்கை, திரைப்பட நூலகம் மற்றும் திரைப்படத் தயாரிப்பு போன்ற பல ஆக்கபூர்வமான வேலைத்திட்டங்களை தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் முன்னெடுத்து வருகிறது.

இவ் வழிவரைபடத்தின் அடுத்த நகர்வே, எமக்கான விநியோகக் கட்டமைப்பு. உலகத்தரத்தில் திரைப்படங்களைத் தயாரிக்க எமது இளைஞர்கள் தயாராகியும் தயாராகிக்கொண்டும் உள்ள இவ் ஆரோக்கியமான சூழலில், எமக்கான விநியோகக் கட்டமைப்பு என்பது இன்றியமையாத ஒன்றாக உள்ளது.

இவ் விநியோகக் கட்டமைப்பை நாம் அனைவரும் சேர்ந்து கட்டியெழுப்புவதன் ஊடாக எமக்கான தனித்துவமான திரைப்படத்துறையை எளிதில் கட்டியமைக்க முடியும்.

Friends benefit:
  • Get 2 years free subscription for eelamplay
  • Donors will be acknowledged publicly on our creations and eelamplay website
  • By receiving a newsletter twice a year, keeping you up-to-date with our work

  • Our fundraising promise:
  • 99% to develop our own Eelam Tamil Film Industry
  • 1% to Administration