ஈழக்காண்பி என்றால் என்ன?

ஈழக்காண்பி (Eelamplay) என்பது ஓர் உறுப்புரிமைக் கட்டணத் திரையோடைத் தளமாகவும் (streaming platform) ஒரு திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாகவும் விளங்குகிறது.

சந்தாதாரராக இணைய எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்?

eelamplay இல் ஒரு வருட சந்தாதாரராக இணைந்து கொள்ள USD 179.90 அறவிடப்படுகிறது. ஒரு தடவை சந்தாதாரராக இணைந்த பின்னர் குறிப்பிட்ட காலப்பகுதியில் வேறு எவ்வித கட்டணத்தையும் செலுத்த வேண்டியதில்லை.

எவற்றில் பார்வையிட முடியும்?

எங்கும், எந்த நேரத்திலும் பார்க்கலாம். eelamplay கணக்கு வைத்திருக்கும் ஒருவர் eelamplay.com இலும், இணையவசதி கொண்ட Smart TV´s, Smartphone, Tablets போன்றவற்றிலும் எமது eelamplay App ஊடாகவும் பார்வையிடலாம்.

இணைய வசதி இல்லாத இடங்களில் எமது App இன் ஊடக நீங்கள் முற்கூட்டியே தரவிறக்கம் செய்துவைத்திருக்கும் படைப்புகளைத் தடையின்றிப் பார்க்கமுடியும்.

எவ்வாறு கணக்கை இடைநிறுத்துவது?

இலகுவானது, eelamplay இல் கணக்கை இரத்து செய்ய எந்த ஒப்பந்தங்களும், பொறுப்புக்கூறல்களும் இல்லை. இரண்டு சொடுக்குகளில் உங்கள் கணக்கை எமது இணையத்திலோ அல்லது App இலோ எளிதாக இரத்து செய்யலாம். இரத்து செய்ய கட்டணங்கள் எதுவும் இல்லை. எப்போது வேண்டுமானாலும் உங்கள் கணக்கைத் தொடங்கவும், நிறுத்தவும் முடியும்.

ஈழக்காண்பியில் எவற்றைப் பார்வையிட முடியும்?

எமது தளம் குறைந்தது நூறு படைப்புகளுடன் ஆரம்பிக்கப்பட உள்ளது. இவற்றில் திரைப்படங்கள், ஆவணப்படங்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட சில குறும்படங்கள் அடங்கும்.

இவற்றுள் சிறுவர்கள் மற்றும் மூத்தோர்களுக்கான பிரத்தியேக படைப்புகளும் உள்ளடங்கும்.

ஒவ்வொரு மாதமும் குறைந்தது ஒரு புதிய படைப்பு eelamplay இல் பிரத்தியேகமாக வெளியிடப்படும்.

குழந்தைகளுக்கு ஏற்றதாக இருக்குமா?

ஆம். குழந்தைகளுக்கு தனியான கணக்கை ஆரம்பிக்க முடிவதுடன், இவற்றைப் பெற்றோர்கள் கண்காணிக்கக் கூடியதாகவும் இருக்கும். வயதெல்லைக் கட்டுப்பாடு, குறித்த படைப்புகளைத் தடுத்தல் போன்ற விடையங்கள் பெற்றோர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும்.