நீங்கள் முழுநீளத் திரைப்படம் அல்லது ஆவணப்படம் இயக்குபவராயின்:
உங்களிடம் புதியதும் படைப்பாற்றல் மிக்கதுமான படைப்புகளுக்கான எண்ணம் இருப்பின்.
எமது திரைக்கதை வங்கியில் ஏலவே தயாரித்தவை மற்றும் தயாரிப்பில் உள்ளவை தவிர, தற்போது 16 திரைக்கதைகள், Script councling மற்றும் doctoring செய்யப்பட்டு தயாரிக்கக் கூடிய நிலையில் உள்ளன. இவை காதல், நகைச்சுவை, சாகசம், அறிவியல் புனைகதை, திகில் மற்றும் கற்கை போன்ற வகைகளைக் கொண்டவை. இவை திரைப்பட விழாப் பார்வையாளர்கள், பொது பார்வையாளர்கள், சிறார்கள் எனப் பல இலக்கு பார்வையாளர்கள் பிரிவுகளாகவும் பிரித்து வங்கியில் சேமிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச நிறைவெண்ணாக இரண்டாயிரம் பேரைத் தனது முதலாவது ஆண்டிலும் (2022), ஆரம்ப காலமான ஐந்து வருடங்களுக்குள் (2027) சீரிய நிறைவெண்ணாக இருபதாயிரம் பேரைத் தவணைக்கட்டணம் செலுத்துவோராக அனைவரின் பங்களிப்போடும் ஈழக்காண்பியால் பெற்றுக்கொள்ள முடியுமானால், அதை ஈழத்தமிழர்களுக்குப் பொதுவான ஓர் உலகளாவிய திரைத்துறை காத்திரமான முறையில் உருவெடுப்பதற்கான ஒரு மைல்கல் நிகழ்வாகக் கொள்ளலாம் என்பது இம்முயற்சியின் ஆரம்பகர்த்தாக்களின் கணிப்பு.