E E L A M P L A Y

ஈழக்காண்பி (Eelamplay) என்பது ஒரு தவணைக்கட்டண (SVOD), பரிவர்த்தன (TVOD) மற்றும் விளம்பர (AVOD) திரையோடைத் தளமாக (streaming platform) இயங்கும் அதேவேளை ஒரு திரைப்படத் தயாரிப்பு நிறுவனமாகவும் உருவாக்கம் காண்கிறது.

கணினிக்கான இணைய உலாவிகளிலும் (web browsers), திறன்பேசிகளிலும், விளையாட்டுப் பொறிகளிலும், தொலைக்காட்சி உப கருவிகளிலும் மற்றும் திறன்தொலைக்காட்சிகளிலும் (Roku, Samsung, LG, PlayStation, XBOX ONE, Amazon Fire TV, Android TV, Apple TV, iOS and Android) இரண்டுவித இயங்கு தளங்களுக்கான (iOS, Android) செயலிகளாகவும் (Apps) தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழிப் பயன்பாட்டுக்கு உரிய வகையிலான மென்பொருட் தீர்வாகவும் ஈழக்காண்பி அமைகின்றது. மேலதிக தகவல்களுக்கு: https://eelamplay.com/ways-to-watch

குறித்த ஈழக்காண்பி அட்டையானது, குறிப்பிட்ட திரைப்படத்தினை ஈழக்காண்பி திரையோடைத்தளத்தில் பார்ப்பதற்கான அனுமதிச் சீட்டாகும். தாங்கள் முற்கூட்டியே நிதிசெலுத்திப் பெற்றுக்கொண்ட அட்டை மூலம், குறிப்பிட்ட திரைப்படம் ஈழக்காண்பி திரையோடைத்தளத்தில் வெளியானதும் தங்கள் குடும்பத்தாருடன் அனைத்து நிகழ்நிலைக் கருவிகள் மற்றும் செயலிகள் ஊடாக எங்கிருந்தவாறும் எந்நேரமும் எத்தனை தடவைகள் வேண்டுமானாலும் பார்த்து மகிழலாம். அத்துடன் ஈழக்காண்பி திரையோடைத்தளத்தில் ஏலவே உள்ள பல முழு நீளத்திரைப்படங்கள், ஆவணப்படங்கள் மற்றும் குறும்படங்களை முற்றிலும் இலவசமாகப் பார்த்து மகிழலாம்.

தங்களின் இப் பங்களிப்பானது, பல சவால்களை எதிர்கொண்டு ஈழத்திரை முன்னெடுப்புக்களை மேற்கொள்ளும் படைப்பாளிகளை ஊக்குவிப்பதுடன் ஈழத்திரையின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கும் இது உறுதுணையாக அமையும். அத்துடன், தங்களுடைய கடவு எண்ணை தங்கள் குடும்பத்தினர் தவிர்ந்த பிறருடன் பகிர்ந்து கொள்ளாமல், பதிலாக அவர்களையும் ஈழக்காண்பி அட்டையினை நிதிசெலுத்திப் பெற்றுக்கொள்ள ஊக்குவிக்குமாறு வேண்டுகிறோம்.

குழந்தைகளுக்கான பிரத்தியேகமான திரைப்படைப்புகளை அவர்தம் வயதெல்லை மற்றும் இரசனையை மையப்படுத்தி தயாரித்து வருகின்றோம். அவை விரைவில் ஈழக்காண்பியில் வெளியிடப்படும்.

Recent Posts