E E L A M P L A Y
  1. நீங்கள் திரைப்பட இயக்குநரா?
  2. நீங்கள் முழுநீளத் திரைப்படம் அல்லது ஆவணப்படம் இயக்குபவராயின்:

    1. உங்களிடம் ஏலவே முழுமையான திரைக்கதை இருக்கும் பட்சத்தில்.

      1. முதலில் Logline மற்றும் Synopsis உள்ளடங்கிய Pitch Deck ஐ எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும். உங்கள் விண்ணப்பம் முழுமையானதாகவும் தயாரிப்புச் சாத்தியமானதாகவும் ஈழக்காண்பியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகவும் இருக்கும் பட்சத்தில் 14 நாட்களுக்குள் உங்களிடமிருந்து மேலதிக விபரங்கள் கோரப்படும்.

      2. உங்கள் Pitch Deck மேற்குறிப்பிட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு திருப்தி அளிக்கக் கூடியதாக இருக்கும் பட்சத்தில் உங்களிடமிருந்து Treatment கோரப்படும், Treatment குறைந்தது 40 A4 பக்கங்கள் கொண்டதாக இருத்தல் வேண்டும். Treatment ஐ அனுப்பும்போது, அத்துடன் எம்மிடமிருந்து கிடைக்கப்பெற்ற NDA (Non-disclosure agreement) ஐயும் கையொப்பமிட்டு திருப்பி அனுப்பிவைக்கவும். Treatment ஐ மூவர் கொண்ட அநாமதேய குழுவினர் பார்வையிடுவர்.

      3. Treatment திருப்தி அளிக்கக் கூடியதாக இருக்கும் பட்சத்தில் உங்களிடமிருந்து முழு திரைக்கதையும் கோரப்படும். முழுத்திரைக்கதையினை NDA (Non-disclosure agreement) யுடன் அனுப்பிவைக்கவும். தேவைப்படின் Script Doctoring மற்றும் Script Consulting வழங்கப்படும்.

      4. ஈழக்காண்பி அல்லது/மற்றும் ஈழக்காண்பியால் தெரிவு செய்யப்படும் தயாரிப்பு நிறுவனம் குறித்த திரைப்படத்திற்கான இலக்குப் பார்வையாளர்கள் (target audience) மற்றும் தயாரிப்புக்கு தேவைப்படும் மொத்த நிதியினை (Total budget) தீர்மானிப்பார்.

      5. ஊதியங்கள் உறுதிசெய்யப்பட்டு, தேவையான ஒப்பந்தங்கள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும்.

      6. இயக்குனரும் தயாரிப்பாளரும் இணைந்து நடிகர்கள், தொழில்நுட்பக்கலைஞர்கள் மற்றும் படப்பிடிப்புத்தளம் (location) போன்றவற்றை முடிவெடுப்பர்.

      7. முன் தயாரிப்பு, தயாரிப்பு மற்றும் பின் தயாரிப்பு வேலைகள் இடம்பெறும்.

      8. முன்பே உறுதிசெய்யப்பட்ட இலக்குப்பார்வையாளர்களை அடையும் பொருட்டு ஈழக்காண்பி ஊடாகவோ, சர்வதேசத் திரைப்பட விழாக்கள் ஊடாகவோ, இரண்டினூடாகவோ அல்லது வேறு வழிகள் ஊடாகவோ குறித்த திரைப்படம் விநியோகிக்கப்படும்.


    2. எமது திரைக்கதை வங்கியிலிருந்து, திரைக்கதையினைத் தெரிவு செய்து இயக்க விரும்பின் உங்கள் சுயவிபரக் கோவையுடன் முந்தைய படைப்புகளின் இணைப்புகளையும் இணைத்து எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
      குறிப்பு: பொதுவெளியில் உள்ள படைப்புகளை மட்டும் அனுப்பவும், இதுவரையில் வெளிவராத அல்லது பிரத்தியாகமான படைப்புகளை அனுப்புவதைத் தவிர்க்கவும். நீங்கள் பகிரும் படைப்புகளின் உரிமம் உங்களுடையதாக இருத்தல் வேண்டும் அல்லது சட்ட ரீதியாக உரிமம் பெற்றபின் அனுப்பிவைக்கவும்.


  3. நீங்கள் புத்தாக்கத்திறன் உடையவரா?
  4. உங்களிடம் புதியதும் படைப்பாற்றல் மிக்கதுமான படைப்புகளுக்கான எண்ணம் இருப்பின்.

    1. முதலில் உங்கள் எண்ணத்தை உள்ளடக்கிய Pitch Deck ஐ எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும். உங்கள் விண்ணப்பம் முழுமையானதாகவும் தயாரிப்புச் சாத்தியமானதாகவும் ஈழக்காண்பியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டதாகவும் இருக்கும் பட்சத்தில் 14 நாட்களுக்குள் உங்களிடமிருந்து மேலதிக விபரங்கள் கோரப்படும்.


  5. நீங்கள் முதலீட்டாளரா?
  6. எமது திரைக்கதை வங்கியில் ஏலவே தயாரித்தவை மற்றும் தயாரிப்பில் உள்ளவை தவிர, தற்போது 16 திரைக்கதைகள், Script councling மற்றும் doctoring செய்யப்பட்டு தயாரிக்கக் கூடிய நிலையில் உள்ளன. இவை காதல், நகைச்சுவை, சாகசம், அறிவியல் புனைகதை, திகில் மற்றும் கற்கை போன்ற வகைகளைக் கொண்டவை. இவை திரைப்பட விழாப் பார்வையாளர்கள், பொது பார்வையாளர்கள், சிறார்கள் எனப் பல இலக்கு பார்வையாளர்கள் பிரிவுகளாகவும் பிரித்துத் திரைக்கதை வங்கியில் சேமிக்கப்பட்டுள்ளது.

    1. புதிய திரைப்படத்தில் முதலீடு செய்ய விரும்புகிறீர்களா/தயாரிப்பாளரா?
      நீங்கள் முதலீடு செய்ய விரும்பும் தொகை மற்றும் எவ்வாறான திரைப்பட வகைகளில் முதலீடு செய்ய விரும்புகிறீர்கள் போன்ற விபரங்களுடன் உங்கள் சுயவிபரக் கோவையை எமக்கு மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கவும்.

    2. ஏற்கனவே தயாரித்த திரைப்படத்தினை ஈழக்காண்பியில் வெளியிட விரும்புகிறீர்களா?
      உங்களிடம் ஏலவே தயாரிக்கப்படட திரைப்படமோ அல்லது ஆவணப்படமோ இருப்பின், அப் படைப்பு இதுவரையில் திரையரங்கு மற்றும் திரைப்பட விழாக்கள் தவிர வேறு எந்தவித இணையத்தளங்களிலோ அல்லது தொலைக்காட்சிகளிலோ வெளிவராத பட்சத்தில் அவற்றை ஈழக்காண்பி பிரத்தியேகமாக வெளியிட ஆவனை செய்யும். முதலில் உங்கள் திரைப்படம் பற்றிய விபரங்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். ஈழக்காண்பியின் தரசோதனை அணியினர் நீங்கள் அனுப்பிய தகவல்களின் அடிப்படையில் முடிவுகள் எடுப்பர்.

      ஈழக்காண்பியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு அப் படைப்பு உள்ளது எனத் தரசோதனை அணியினர் கணிக்கும் பட்சத்தில் உங்களிடம் திரைப்படத்தினை இணைய வாயிலாகப் பார்ப்பதற்கான இணைப்பினை அனுப்புமாறு கோரப்படும்,. அவ்விணைப்பினை எமக்கு அனுப்பும்போது பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் பொறுப்பு உங்களுடையது. பாதுகாப்புக்கள் எதற்கும் ஈழக்காண்பி பொறுப்பு ஏற்காது.


  7. விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்:
    1. ஈழத்திரைக்கான திரைப்பட மதிப்பீட்டுப் பொறிமுறை சரத்து மூன்றில் (ஈழத்திரை மதிப்பீட்டணி பேணவேண்டிய விழுமியங்கள்) குறிப்பிடப்பட்டுள்ளவையே ஈழக்காண்பியும் தனது விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளாகக் கொண்டுள்ளது.
      ஈழத்திரைக்கான திரைப்பட மதிப்பீட்டுப் பொறிமுறை இணைப்பு: https://eelamcinema.com/review.html


  8. தொடர்புகளுக்கு:
    1. info(அ)eelamplay.com

© 2024 Eelamplay. All Rights Reserved. All videos and shows on this platform are trademarks of, and all related images and content are the property of, EELAMPLAY. Duplication and copy of this is strictly prohibited. All rights reserved.

Follow Us :

Recent Posts